Freelancer / 2024 ஜூன் 02 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் இணை நிறுவனர் டின் ஓ, சுகயீனம் காரணமாக கடந்த 29ம் திகதி யாங்கோன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 97.
முன்னாள் இராணுவ தளபதியான டின் ஓ, இராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சி தோல்வி அடைந்த பிறகு, 1988இல் ஆங் சான் சூகியுடன் இணைந்து மியான்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை தொடங்கினார்.
கட்சியின் துணைத்தலைவராக இருந்த அவர், ஆங் சாங் சூகி போலவே 2010 பொதுத் தேர்தலுக்கு முன்பாக விடுவிக்கப்படுவதற்கு முன், 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறையிலும், வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், 2020இல் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், ஆங் சாங் சூயை போல டின் ஓ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.S
6 minute ago
15 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
34 minute ago