Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவில் உள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் வெப்பத்தால் வாடும் விலங்குகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் அண்மைக்காலமாக சுமார் 38 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிருக்கக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகள் உயர் வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக மிருகக் காட்சி பணியாளர்கள், ஒவ்வொரு விலங்களுக்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஐஸ்கிரீம்களைத் தயார் செய்து வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்கிரீம்களையும், கருப்பு ஹவ்லர் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விலங்குகளின் இருப்பிடங்களுக்கு அருகில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் நீரை நிரப்பி விலங்குகள் நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .