Ilango Bharathy / 2022 நவம்பர் 21 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்ட காரணத்திற்காக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கணக்கை, டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியிருந்தது.
தற்போது டுவிட்டரை எலோன் மஸ்க் கைப்பற்றியுள்ள நிலையில் ட்ரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தன.

இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலோன் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார்.
இவ்வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் (51.8 %) ட்ரம்பை சேர்க்கலாம் என்பதற்கே வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கின் மீது போடப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
இதனால் 22 மாதங்களுக்கு பின்னர் ட்ரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
27 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago