2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

முக்கிய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

Freelancer   / 2022 ஜூன் 25 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். 

இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித்தை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இதில் அவர் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டதால் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சஜித் மிர் சிறையில் அடைக்கப்பட்டான். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .