2026 மே 14, வியாழக்கிழமை

dd

முன்னாள் அரசியல் ஆலோசகருக்கு ஆயுள் தண்டனை

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சீன சமூகக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அரசியல் ஆலோசகருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

உள் மங்கோலியாவின் துணைத் தலைவராக இருந்த மா மிங், 150 மில்லியன் யுவானுக்கு மேல் சொத்து குவித்ததை கண்டறிந்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மா மிங், வாழ்க்கைக்கான அரசியல் உரிமைகளை இழந்துள்ளார் என கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜிபோ நகரின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஜிலின் மாகாணம் மற்றும் உள் மங்கோலியாவில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், வணிகச் செயல்பாடுகள், பதவி உயர்வுகள் மற்றும் வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக மற்றவர்களிடமிருந்து பலன்களைப் பெற்றதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என சின்ஹுவா தெரிவிக்கிறது. 

பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் இரண்டிலும் 157.85 மில்லியன் யுவான் (சுமார் 24.93 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டு  தீர்ப்பளிக்கப்பட்டதாக சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.

மாவின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இலஞ்சம் மூலம் கிடைத்த சட்டவிரோத ஆதாயங்கள் மீட்கப்பட்டு அரச கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .