Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான், காபூலில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், 2021ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன..
இந்நிலையில், தற்போது, கடந்த ஆண்டு, தலைநகர் காபூலில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையத்தை மீண்டும் செயற்பட அனுமதி வழங்கி உள்ளனர்.
ஏற்கெனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025