2026 மே 14, வியாழக்கிழமை

dd

மோடியுடன் தொலைக்காட்சி விவாதம்: கான்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிடையேயான வேறுபாடுகளைக் களைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதமொன்றை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

விவாதத்தின் மூலமாக வேறுபாடுகள் களையப்படுமானால் தெற்காசியாவிலுள்ள பில்லியன் கணக்கானோர் பயன் பெறுவர் என ரஷ்யா டுடேயுடனான நேர்காணலொன்றில் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பதிலளிக்க வினவப்பட்டதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு உடனடியாக பதிலளித்திருக்கவில்லை.

இந்தியா எதிரி நாடானதால், அவர்களுடனான வர்த்தகம் குறைந்ததாக பிரதமர் கான் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .