Editorial / 2019 மார்ச் 28 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்காக ரஷ்யாவுடன் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணியாற்றியதாக ஏறத்தாழ அரைவாசி அமெரிக்கர்கள் இன்னும் நம்புவதாக, குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப்பை, சிறப்பு வழக்குத் தொடருநர் றொபேர்ட் மல்லர் விடுவித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட றொய்ட்டர்ஸின் கருத்துக்கணிப்பு வெளிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பான றொபேர்ட் மல்லரின் 22 மாத விசாரணையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி தொடர்பில் சிறிது நேர்மறையாக அமெரிக்கர்கள் உணருவதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட குறித்த கருத்துக்கணிப்பு வெளிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், றொபேர்ட் மல்லரின் விசாரணையினுடைய, ஐக்கிய அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரினுடைய நான்கு பக்க பொழிப்பானது, ரஷ்யாவுடன் ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார் என்று கூறப்படுவது தொடர்பான கருத்தில் சிறிது மாற்றத்தையே வெளிப்படுத்தியிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட வில்லியன் பாரின் பொழிப்பில், 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரசார முகாமானது ரஷ்யாவுடன் கூட்டிணைவாக செய்ற்பட்டிருந்தது என்பது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் றொபேர்ட் மல்லர் கண்டுபிடிக்காதபோதும், விசாரணைக்கு தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதி ட்ரம்பை விடுவிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
அந்தவகையில், கூட்டிணைவு, நீதிக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக குறிப்பாக வினவப்பட்டபோது, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக ஜனாதிபதி ட்ரம்ப்போ அல்லது அவரது பிரசார முகாமிலிருந்த எவரோ ரஷ்யாவுடன் சேர்ந்து பணியாற்றியதாக 48 சதவீதமான கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தோர் தெரிவித்துள்ளனர். குறித்த சதவீதமானது, கடந்த வாரத்திலிருந்து ஆறு சதவீதம் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, தனது நிர்வாகம் மீது ரஷ்யா தாக்கம் செலுத்துவது குறித்த விசாரணைகளை நிறுத்த ஜனாதிபதி ட்ர்ம்ப் முயல்வதாக 53 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையாது கடந்த வாரத்திலிருந்து இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பை 43 சதவீதமானோர் அங்கிகரித்துள்ள நிலையில், குறித்த எண்ணிக்கையானது கடந்த வாரத்தை விட நான்கு சதவீதம் உயர்ச்சியடைந்துள்ளது
26 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago