Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார சேவைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரூ. 4,500 கோடி முதலீடு செய்வதால், எதிர்வரும் ஆண்டுகளில் 5,800 புதிய வைத்தியசாலை கட்டில்கள் மற்றும் மேலதிகமாக 1,000 மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களை இணைத்துக் கொள்ள ஜம்மு காஷ்மீர் எதிர்பார்க்கிறது.
வைத்தியசாலைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்வதை யூனியன் பிரதேசம் எதிர்பார்ப்பதுடன், முதலீட்டாளர்களுக்காக காஷ்மீரில் செம்போரா புல்வாமா, லெல்ஹர்-புல்வாமா மற்றும் பெமினா-ஸ்ரீநகர் ஆகிய மூன்று இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
12,553 பேருக்கு வேலைகள், 5,865 கட்டில்கள் மற்றும் சுமார் 1,000 மருத்துவ பட்டப்படிப்பு ஆசனங்களைச் சேர்க்கும் வகையில் ரூ.4,575 கோடி மதிப்பிலான மருத்துவத் திட்டம் தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டங்களில் வைத்தியசாலைகள், ஆராய்ச்சி மற்றும் தாதியர் பயிற்சி நிறுவனங்கள், நோய் கண்டறியும் மையங்கள், துணை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மலிவு விலையில் மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மேலதிக மருத்துவ ஆசனங்கள் பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத் திட்டங்கள் வரவிருக்கும் இடங்களுக்கு மெட் நகரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வருடங்களில் 20 முதலீட்டாளர்கள் சுகாதாரத் திட்டங்களை உருவாக்கத் தயாராக உள்ளதால், அவை முக்கிய செயல்பாடுகளைக் காண உள்ளன என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள சுகாதாரப் பாதுகாப்புத் துறையானது உள்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் சுகாதார அமைப்பில் முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதுடன், யூனியன் பிரதேசத்தின் மேம்படுத்தப்பட்ட சுகாதார குறிகாட்டிகளில் இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .