2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை

Editorial   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீ​னா​வின் சொத்து மேலாண்மை நிறு​வனம் ஒன்​றின் முன்​னாள் நிர்​வாகியை ஊழல் குற்​றச்​சாட்​டில் சீன அரசு  செவ்வாய்க்கிழமை (09) காலை தூக்​கி​லிட்​டது.

சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மாக 'சீனா ஹுவாரோங் இன்​டர்​நேஷனல் ஹோல்​டிங்ஸ் (சிஎச்​ஐஎச்)’ உள்​ளது.

இதன் பொது மேலா​ள​ராக இருந்​தவர் பாய் தியான்​ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் 15.6 கோடி டொலர் லஞ்​சம் பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதில் அவர் குற்​ற​வாளி என நிரூபிக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் செவ்வாய்க்கிழமை (09) காலை தூக்​கில் இடப்​பட்​ட​தாக சீன அரசின் ஊடக​ம் தெரி​வித்​துள்​ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X