Freelancer / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானால் முன்வைக்கப்பட்ட 10 அம்சத் திட்டம் அடிப்படைத் தன்மையற்றது என்றும், அமெரிக்கா முன்வைத்த திட்டமே பேச்சுவார்த்தைக்கு உகந்த அடிப்படையைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை எவ்வித தடைகளும் அல்லது தாமதமும் இன்றி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்ப்பதாக லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த, இரண்டு வார போர்நிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால்,ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடப்பது அவசியம் என்பதை அமெரிக்கா ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது.
மிக முக்கியமாக, தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்பதை லீவிட் தெளிவுபடுத்தியுள்ளார்.
லெபனான் இந்த போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல. இது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. (a)
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago