Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக கின்னஸ் சாதனைபடைத்த பிரான்ஸைச் சேர்ந்த லுஸில் ராண்டன் (Lucile Randon) தனது 118 ஆவது வயதில் நேற்று முன்தினம்(17 ) காலமானார்.
1904ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 41ஆவது வயதில் கன்னியாஸ்திரியாக முடிவெடுத்தார் எனவும் அதன் பின்னர் ஒரு மருத்துவமனையில் 31 ஆண்டுகள் பணிபுரிந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் டூலோன் (Toulon) நகரில் உள்ள தாதிமை இல்லத்தில் உறக்கத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago