Freelancer / 2024 ஜூலை 30 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட சில இலக்குகள் மீது தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் (Golan Heights) பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், பெய்ரூட்டின் தெற்கே உள்ள புறநகர்ப் பகுதியான ஹரேட் ஹ்ரீக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டு தளங்கள் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தது. R
13 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
55 minute ago
1 hours ago