2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

கணவருடன் சென்ற மகளையும் 10 மாதக் குழந்தையையும் காணவில்லை

Editorial   / 2026 மே 10 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னாரில் இருந்து தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற மகளையும், 10 மாதங்கள் நிரம்பிய பேரப் பிள்ளையையும் காணவில்லை எனத் தெரிவித்து, அப்பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (08) முறைப்பாடு செய்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெயாழினி (வயது 18) மற்றும் அவரது 10 மாதக் குழந்தையுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

"எனது மகளின் கணவர், தனது தாய்க்குச் சுகயீனம் எனக் கூறி கடந்த 2ஆம் திகதி (02.05.2026) தனது சொந்த இடமான மட்டக்களப்பிற்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக மன்னாரில் இருந்து எனது மகளையும், பேரப் பிள்ளையையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

மன்னாரில் இருந்து வவுனியா சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்குச் செல்வதாக அவர் கூறிச் சென்றார். இந்த நிலையில், தற்போது எனது மகளும் பேரப் பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். எனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ள போதிலும், எனது மகளும் பிள்ளையும் அங்கு செல்லவில்லை" எனப் பாதிக்கப்பட்ட தாய் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, படத்தில் உள்ள தாய் மற்றும் குழந்தை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 077-5841705, 077-6902536 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .