Editorial / 2026 ஜனவரி 13 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆண் வாரிசு மீதான மோகத்தில் தம்பதி அடுத்தடுத்து குழந்தை பெற்று கொண்டனர். கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனாலும் தம்பதி விடாத நிலையில் 11வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இந்த சம்பவம், ஹரியானாவில் இடம்பெற்றுள்ளது
ஆண், பெண்.. எந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தை.. குழந்தை தான். குழந்தையின் பாலினத்திலும் எந்த பாகுபாடும் கிடையாது. ஆண்களை போல் பெண்களும் தற்போது அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அம்மா, அப்பாக்களையும் மகன்களை போல் மகள்கள் இப்போது பராமரித்து வருகின்றனர்.
இதனால் எந்த குழந்தையாக இருந்தாலும் கூட மனதார தம்பதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதும் கூட சில தம்பதிகளுக்கு என்ன தான் பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இதற்கு முயற்சி செய்யும் தம்பதிகளில் சிலருக்கு மகன் பிறப்பது உண்டு. சிலருக்கு மகள்கள் தான் தொடர்ந்து பிறப்பதை நம் அண்டை வீடுகளில் கூட பார்த்து இருக்கலாம்.
இப்படித்தான் ஆண் குழந்தை மீதான மோகத்தால் ஹரியானாவில் ஒருவர் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இப்போது 11 வதாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பமே ஹேப்பியாகி உள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டதில் நடந்துள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி பெயர் சுனிதா. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. சஞ்சய் கூலி வேலைக்கு சென்றார். அதன்பிறகு சிறிது காலம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது. தற்போது 100 நாள் வேலை திட்டத்துக்கு சென்று வருகிறார்.
18 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago