2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

விமான உணவில் எட்டிப் பார்த்த பாம்பின் தலை

Ilango Bharathy   / 2022 ஜூலை 27 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானமொன்றில்  பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலையொன்று இருந்த சம்பவம்  துருக்கியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
துருக்கியின் தலைநகரான  அங்காராவில் இருந்து ஜேர்மனிக்குக்  கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி புறப்பட்ட விமானத்திலேயே  இச்சம்பவம் நடந்துள்ளது.
 
சம்பவ தினத்தன்று குறித்த விமானத்தில் பரிமாறப்பட்ட உணவை உண்டுகொண்டிருந்த ஊழியர் ஒருவர்  அவ்வுணவில் பாம்பின் தலையொன்று  இருப்பதைக்   கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  மேலும் அதனை வீடியோவாக எடுத்து டுவிட்டரிலும்  பதிவிட்டுள்ளார்.
 
இது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து ,  குறித்த  விமான நிறுவனமானது, தனக்கு  உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது. 
 
எனினும்  உணவு வழங்கும் நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருப்பதை மறுத்துள்ளது.
மேலும் ”எங்கள் நிறுவனத்தில் சமைக்கப்படும் உணவுகள் 280 பாகை செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கப்படுகின்றன எனவும் இப் பாம்பின் தலை பாதி வெந்த நிலையில் இருப்பதன் மூலம், சமைத்த பின் வேறு யாரோ இதை வேண்டுமென்றே சேர்த்து இருப்பார்கள் என்று” தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நடைபெற்று வருவதாக குறித்த  விமான நிறுவனம் தெரிவித்துள்ளது,

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .