2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விரைவில் விற்பனைக்கு வரும் ‘சனியன்’

Ilango Bharathy   / 2022 ஜனவரி 13 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெங்காயம் உரிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக, உரித்தால் கண்ணீர் வராத வெங்காயத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான  ரிக் வொட்சன் (Rick Watson) என்பவர் கண்டுபிடித்துள்ளனர்.

பயிர் வளர்ச்சி ஆராய்ச்சியாளரான இவர் கடந்த 35  ஆண்டுகளான மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாகவே சனியன் (Sunion) எனப்படும் குறித்த வெங்காயத்தை கண்டுபிடித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் இவ்வெங்காயமானது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வகையைச் சேர்ந்தது அல்ல என்பதுதான். இவை  சுமார் மூன்று தசாப்தங்களாக கிராஸ் பிரீடிங் எனப்படும் பயிர் கலப்பின முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவை பிரித்தானியாவின் சந்தையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் குறிப்பிட்ட சில காலத்திற்கு விற்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .