Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 29 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவில் பெண் குழந்தையொன்று வாலுடன் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பெண் குழந்தையானது மெக்சிகோவின் நியூவோ லியான் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளது.
சி-செக்ஷன் மூலம் பிறந்த இக் குழந்தையானது தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், இதன் உடலில் இருந்த வால் இரண்டு அங்குல நீளம் கொண்டதாகக் காணப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இது போன்று வாலுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, உலகளவில் 200க்கும் குறைவாகவே இருப்பதாகவும், இது மெக்சிகோவில் பதிவு செய்யப்பட்ட முதல் சம்பவம் எனவும் மருத்துவர் ஜோஸ் ரூடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோஸ் ரூடா மேலும் தெரிவிக்கையில் ” பகுப்பாய்வுகளின் படி, அது தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைக் கொண்ட ஒரு உண்மையான வால் ஆகும்.
கருப்பையில் வளரும் கருவின் வாலில் இருந்து இவ் வாலானது எல்லாக் குழந்தைகளுக்கும் வெளிப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக அது மீண்டும் உடலால் உள் இழுக்கப்பட்டு அது டெயில் போனாக உருவாக்குகின்றது . மேலும் அவை பெரும்பாலும் ஆண் குழந்தைகளிலேயே காணப்படுகின்றன ” என்றார்.
அத்துடன் "உண்மையான வால்கள்" மிகவும் அரிதானவை எனவும், இதுவரை கண்டறியப்பட்ட வால்களில், மிக நீளமானவை 20 சென்டிமீற்றர் (7.9 அங்குலங்கள்) எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago