Editorial / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் விமானி மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு, விமானத்தை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். விமானத்தில் 5 ஊழியர்கள் உட்பட மொத்தம் 55 பேர் பயணம் செய்துள்ளனர். இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தை வழக்கமான ஓடுதளத்தில் இறக்க முடியாத சூழல் ஏற்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. எனினும், விமானம் இரண்டாக உடைந்து இருந்ததாக அறியமுடிகின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும், விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த இயந்திரக் கோளாறுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
2 hours ago