Ilango Bharathy / 2022 மே 29 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலேயே கடந்த 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பானதாகவும் இதனை சற்றும் எதிர் பாராத பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கண்களை மூடி மறைத்துக் கொண்டு சென்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தின் கணினி ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதோடு இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago