Editorial / 2024 ஜூலை 28 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

விவாகரத்து கிடைத்ததால் பெண்ணொருவர் விருந்து வைத்து கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவரே விருந்து வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஹோட்டலில்மிகப்பெரிய அளவில் விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளார்.
விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட் டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று அவர் பாடலுக்கு நடனமாடியும், பாடல்களைப் பாடியும் கொண்டாடினார். ஊதா நிறலெஹங்கா உடையணிந்து அவர்தோழிகளுடன் ஆடிப்பாடினார். அவரது கொண்டாட்ட வீடியோசமூக வலை தளங்களில் வைரலாகிஉள்ளது. அவர் யாரென்ற விவரம்தெரியவில்லை.
மேலும் எதற்காக அவர் விவாகரத்து பெற்றார் என்ற காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு,வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் சிலர், விவா கரத்து கிடைத்தது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் விவாகரத்தை கொண்டாடினால், திருமணம் செய்வதைக் கண்டு மக்கள் அஞ்சும் நிலை ஏற்படலாம் என்றும்கூறியுள்ளனர்.
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago