Editorial / 2019 ஜூலை 05 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசாங்கத்தால், வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், வைகோவுக்கு ஓராண்டு சிறைதண்டனை விதித்து, சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம், இன்று (05) தீர்ப்பு வழங்கியுள்ளது.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 2009ஆம் ஆண்டு, சென்னையில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு எதிராக, தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதன் பின்னரே, இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ, குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
எனினும், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதால், தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு, வைகோ கோரியதையடுத்து, மேன்முறையீடு செய்வதற்கு, அவருக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க தரப்பில், ம.தி.மு.கவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
12 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
56 minute ago