2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘ஸ்டெனா இம்பெரோவை விடுவிக்குக’

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரேபிய வளைகுடாவில் கைப்பற்றிய பிரித்தானியக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெரோவை விடுவிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரெமி ஹண்ட், ஈரானை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கப்பலை கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியமை தொடர்பாக புதிய காணொளியை ஈரான் வெளியிட்டமையைத் தொடர்ந்தே ஹண்டின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

இக்கப்பலானது சர்வதேச கடற் சட்டங்களை மீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலுள்ள குறித்த கப்பலின் சிப்பந்திகள் 23 பேருடனும் தொடர்புகொள்ள விரும்புவதாக அக்கப்பலின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அரேபிய வளைகுடாவுக்கான முக்கியமான கப்பற் பாதையொன்றில் ஈரானிய புரட்சிகர காவலர்களால் ஸ்டெனா இம்பெரோ கப்பல் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்தவகையில், ஈரானிய புரட்சிகர காவலர்களுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி முகவரகத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட காணொளியானது கப்பல் கைப்பற்றப்பட்ட தருணத்தை காண்பிப்பது போலுள்ளது. அதில், அதிவேக படகுகளால் கப்பல் சூழப்பட்ட பின்னர் முகமூடி அணிந்த படைகள் கயிறுகளின் மூலம் ஹெலிகொப்டரிலிருந்து கப்பலில் இறங்குவது காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய றோயல் கடற்படைக் கப்பலொன்றான எச்.எம்.எஸ் மொன்ட்றோஸுக்கு எச்சரிக்கப்பட்டு அது இடைமறிக்கச் சென்றபோதும், ஸ்டெனா இம்பெரோ கைப்பற்றப்படுவதை அதிக தூரத்தில் தடுக்க முடிந்திருக்கவில்லை. அது சென்ற நேரம் ஈரானிய கடற்பரப்புக்குள் ஏலவே ஸ்டெனா இம்பெரோ சென்றிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பகாக இன்னொரு பிரித்தானியக் கொடியுடைய கப்பல் இடைமறுறிக்கப்படுவதை எச்.எம்.எஸ் மொன்ட்றோஸ் தடுத்திருந்தது.

இதேவேளை, மீன்பிடிப் படகொன்றுடன் மோதியதைத் தொடர்ந்து, சிறிய படகின் பதிலளிக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காதலாலேயே ஸ்டெனா இம்பெரொ கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஈரானிய அரச செய்தி முகவரகமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X