Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்லோவேகியாவில் கடந்த 12ம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது. செக் குடியரசு எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்லோவேகியாவின் மேற்கு பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி 200 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கனமழையால் ஸ்லோவேகியா தலைநகர் பிராட்டிஸ்லாவா நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 18ஆம் திகதி நிலவரப்படி டனுபே ஆற்றில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நீர்மட்டம் 970 செ.மீ ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பிராட்டிஸ்லாவா நகரின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும், ஆஸ்திரியா எல்லையையொட்டி அமைந்துள்ள டெவின் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெவின் மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மொராவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகளால் 20 மில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டராபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.S
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago