2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான அலுவலகத்துக்கு பூட்டு

Freelancer   / 2024 ஜூலை 10 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக, அப்பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், அந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஹிஜாப் சட்டங்களையும் கடுமையாக்கியது.

இதனிடையே, துருக்கி விமான நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வருகிறது

இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தெரியவந்தது

இந்நிலையில், விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்ற ஈரான் பொலிஸார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .