Freelancer / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு ஆன்லைன் மூலம் ஒருவர் அறிமுகம் ஆனார்.
அந்த நபர் தன்னை அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா என்று கூறியிருக்கிறார்.
மேலும், தனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்படுவதாகவும், ஹவாய் தீவில் ஒரு வீடு கட்டி நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்றும் அந்த நபர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்
மேலும், தன்னிடம் இருந்த பணம் எல்லாம் திரைப்பட தயாரிப்பு பணிகளில் முடங்கியிருப்பதாக அந்த நபர் கூறியதை மூதாட்டி உண்மை என நம்பியுள்ளார்.
மேலும் அந்த நபர் கேட்கும்போதெல்லாம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தான் வசித்து வந்த வீட்டை கூட விற்று சுமார் ரூ.6 கோடியை அந்த மூதாட்டி அனுப்பி உள்ளார்.
ஆனால், கடைசியில் இது ஒரு மோசடி வலை என்பதை உணர்ந்த மூதாட்டி, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கேம்பிரிட்ஜ்ஷயர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர். R
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025