Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் வட கரோலினாவில் ஏற்பட்ட ஹெலீன் சூறாவளியால் காணமால் போனவர்களில் இன்னும் 92 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று, ஆளுநர் ராய் கூப்பர் செவ்வாயன்று தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு உறுதியான எண்ணிக்கை அல்ல என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன், ஏனெனில் பணிக்குழு அதன் வேலையைத் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.
“புயலின் விளைவாக வட கரோலினாவில், 95 பேர் இறந்ததாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் புயல் கரையைக் கடந்த புளோரிடா உட்பட மொத்தம் 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
“மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் சேகரிக்கப்படுவதால், காணாமல் போனோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என கூறினார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago