2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹைட்டி பிரதமர் இராஜினாமா?

Mayu   / 2024 மார்ச் 12 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, ஹைட்டி இராச்சியத்தில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ள நிலையில் ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹென்றி தற்போது போட ரிகோவில் இருப்பதாகவும், அவர் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் ஆயுதக் குழுக்கள் கூறுகின்றன.

கூலிப்படையினரால் நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர்,  கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹென்றி நாட்டின் பிரதமரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X