Freelancer / 2026 மார்ச் 15 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஒன்றிணைந்து ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த பகுதிக்குத் தங்கள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் அந்த நீரிணையைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்குவதை உறுதி செய்ய முடியும் என அவர் நம்புகிறார்.
ஏதோ ஒரு வழியில் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்தே வைத்திருப்போம் என்று உறுதியளித்துள்ள ட்ரம்ப், அதன் கடற்கரைப் பகுதிகள் மீது அமெரிக்கா மிகக் கடுமையான குண்டுவீச்சை நிகழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். (a)
20 minute ago
36 minute ago
42 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
42 minute ago
43 minute ago