2021 மே 06, வியாழக்கிழமை

’கட்டாருடனான உறவைத் துண்டிக்கும் திட்டமில்லை’

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாருடனான தமது உறவை இல்லாது செய்யும் திட்டமெதும் கிடையாது என, பாகிஸ்தானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நேற்றுத் தெரிவித்தது. சவூதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகள், கட்டாருடனான உறவை முறித்துக் கொண்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டது.  

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, அமைச்சின் பேச்சாளர் நபீஸ் ஸாகாரியா, தங்களது நாட்டிடம், அவ்வாறான திட்டங்கள் எவையும் கிடையாது எனத் தெரிவித்தார். “கட்டார் விடயத்தில், தற்போது எதுவும் கிடையாது. ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின், அறிவிப்பொன்றை நாங்கள் வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.  

குறிப்பிடத்தக்க அளவு ஷியா முஸ்லிம்களைக் கொண்டுள்ள பாகிஸ்தான், அண்மைய சில ஆண்டுகளான, சுன்னி முஸ்லிம் தோழமை நாடான சவூதி அரேபியாவுக்கும் ஷியா முஸ்லிம் அயல் நாடான ஈரானுக்குமிடையில், சிக்கிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .