2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் 25 லட்சம் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள்

Super User   / 2012 மார்ச் 15 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் இந்திய உச்ச நீதிமன்றில் (உயர் நீதிமன்றில்) தெரிவித்துள்ளது.

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமா என்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றித்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது  இந்திய சுகாதார அமைச்சின் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாளர் சயான் சட்டர்ஜியினால் தாக்கல் செய்யப்பட்ட சத்திய கடதாசியொன்றிலேயே இவ்விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.

எனினும், டில்லி மேல் நீதிமன்றத்தில் நாஸ் பௌண்டேஷன் எனும் தொண்டர் நிறுவனம் தொடுத்த வழக்கொன்றில், வயதுவந்த ஆண்கள் பரஸ்பர சம்மதத்துடன் அந்தரங்கமாக பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாகாது என 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இந்திய உச்ச நீதிமன்றில்  தற்போது நடைபெறுகின்றது.

ஆண் ஓரின சேர்க்கையாளர்களில் உயர் ஆபத்துள்ள 4 லட்சம் பேரை எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் 2 லட்சம் பேர் ஏற்கெனவே இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சட்டர்ஜி தெரிவித்தார்.

பெண் பாலியல் தொழிலாளர்களில் எச்.ஐ.வி. தொற்றுடையோர் 4.60-4.94 சதவீதமாக உள்ளதாகவும் ஆண் ஓரின சேர்க்கையாளர்களிடையே எச்.ஐ.வி. தொற்றுடையோர்  6.54-7.23 சதவீதம் எனவும் அவர் கூறினார்.

ஓரின சேர்க்கையை தொடர்ந்தும் தண்டனைக்குரிய குற்றமாக கருதுவதால் ஆண் ஓரின சேர்க்கையாளர் பகிரமாகுவதை தடுக்கிறது  நாஸ் பௌண்டேஷன்  நிறுவனம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இவர்கள் சமூகத்தில் ஒளிந்திருப்பதால் முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது' என அந்நிறுவனத்தின் வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X