Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள் என்று 'பேட் கேர்ள்' இயக்குநர் வர்ஷா தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. செப்டம்பர் 5-ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தினை வர்ஷா இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்பு உருவானது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்துஇ தற்போது வெளியாகவுள்ளது.
'பேட் கேர்ள்' குறித்து வர்ஷாஇ 'இந்தப் படம் பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 13 நாடுகளின் விழாக்களுக்கு பங்கேற்று வந்திருக்கிறேன். 'பேட் கேர்ள்' படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள். அதே நேரத்தில் இங்கு குப்பை படம் என்று கூறினார்கள். பல நாடுகளில் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்தார்கள். பல நாடுகளில் சுற்றி இப்படம் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறது.
இப்படம் பிடிக்கவில்லை என்றால்இ அனைவருக்கும் அவரவருடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் முடிவெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள். அதுவரை பிரச்சினை இல்லை ஆனால் பெண்கள் தங்களுக்கு என்று ஆசை விருப்பம் என்று கூறும்போது தான் பிரச்சினையாக மாறுகிறது.
பாலியல் உறவு ரீதியாக பேசக்கூடாது என்பதை விட எப்படிப் பேச வேண்டும் என்பது இருக்கிறது. இப்படி வெளிப்படையாக பேசினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்காதீர்கள். உரையாடல் தான் மிகவும் உதவியாக இருக்கும். பெண்கள் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெண்களா கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்?. கலாச்சாரம் தானே பெண்களை பாதுகாக்க வேண்டும்.
சம்பந்தமே இல்லாமல் நானும், அஞ்சலியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றோம். எங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ராட்டடோம்-ல் ராம் சாருடைய படத்தை திரையிடும்போது எங்களை அழைத்து பேசிக் கொண்டிருப்பார். எங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார்.
வெற்றிமாறன் சாரிடம் பணியாற்றும் போது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கேமராவை ஏன் இங்கே வைத்தீர்கள்? இதுபோன்று ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் அவ்வப்போது நம்பிக்கை இழந்து விடுவோம். ஆனால்இ அனுராக் சார் தான் இழந்த நம்பிக்கையை மீட்டுத் தருவார்.
வெற்றிமாறன் சாரிடம் கதை எழுதக் கற்றுக் கொண்டேன். தனுஷ் சாரிடம் எப்படி முடிப்பது என்பதை கற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார் வர்ஷா.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago