2026 மே 14, வியாழக்கிழமை

dd

100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறுவன்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவனொருவனுக்கு 100 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சித்திக்கு பிறந்த, அதாவது தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தைகளை மூச்சைத் திணறடிக்கச்   செய்து  கொலை செய்த குற்றத்திற்காகவே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது கடந்த 2017 ஆம் ஆண்டும் மற்றும் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளதாகவும், இம் மரணங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயதான   குறித்த சிறுவனை  விசாரணை செய்த போதே கோபத்தில் அவ்வாறு செய்ததாகக் கூறி தனது குற்றத்தை அச்சிறுவன் ஒப்புக்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அச்சிறுவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் இது குறித்து அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் அச்சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .