2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

100 மணி நேரத்தில் இப்படியொரு சாதனையா?

Ilango Bharathy   / 2023 மே 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயதான பெண்ணொருவர் தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

சமூகவியல் பட்டதாரியும், சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து அசத்தியுள்ளார்.

 

இதன்போது சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த இந்திய பெண்மணி லதா டாண்டன், புதிய சாதனையாளர் ஹில்டா பாஸேக்கு தனது  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X