2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

104 வருடங்களாக இங்கேதான் வசிக்கின்றேன் -நெகிழவைக்கும் மூதாட்டி

Ilango Bharathy   / 2022 ஜூலை 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

104 வருடங்களாக பெண்மணி ஒருவர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றமை  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த எல்சி ஆல்காக்  என்கிற பெண்மணியே சுமார் 104 வருடங்களாக  பிரித்தானியாவின் பார்கர் எனும் தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில் வசித்து வருகின்றார்.

இவர் இதுவரை சுமார் 2 உலகப்போர்களை சந்தித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

1902-ஆம் ஆண்டு இவ்  வீட்டை அவரது குடும்பத்தினர்  வாடகைக்கு எடுத்துள்ளனர் எனவும் அதன் பின்னர்,  1941 ஆம் ஆண்டு அவருக்கு   திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், திருமணத்தின் பின்னர் அவர் தனது கணவருடன் அவ்வீட்டிலேயே வசிக்கத் தொடங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அவரது தாய் மற்றும் தந்தையின் மரணத்தின் பின்னர் கடந்த  1960 ஆம் ஆண்டு வங்கியில் இருந்து கடன் பெற்று, சுமார் 25 பவுண்டுக்கு குறித்த வீட்டை வாங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது இவ்வீட்டின் மதிப்பு 75,000  பவுண்டுகள் எனக்  கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ”தன் வாழ்வோடு இரண்டற கலந்த இந்த வீட்டை விட்டு தான் பிரியவேயில்லை என்றும்,  தன்னுடைய இறுதி மூச்சு வரை இவ்வீட்டில் குடியிருக்கவே ஆசைப்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .