Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்திலாந்து பெருங்கடலில் பனிப்பாறையுடன் மோதி, கடலில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான "டைட்டானிக்" (Titanic) விபத்தின் போது, ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய உயிர்காப்பு ஆடை (Life Jacket), சரியாக 114 ஆண்டுகளின் பின்னர் பெரும் தொகைக்கு ஏலம் போயுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உயிர்காப்பு ஆடை, லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 670,000 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் (சுமார் 25 கோடி இலங்கை ரூபாய்) என்ற சாதனை விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த அகால விபத்தின் போது, கப்பலில் மொத்தம் 2,223 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 1,517 பேர் உயிரிழந்ததுடன், 706 பேர் மாத்திரமே கப்பலில் இருந்த 20 உயிர்காப்புப் படகுகள் (Lifeboats) மூலம் காப்பாற்றப்பட்டனர்.
தற்போது ஏலம் விடப்பட்ட இந்த உயிர்காப்பு ஆடையானது, கப்பலின் முதலாம் வகுப்பில் பயணம் செய்து உயிர் தப்பிய லாரா (Laura Mabel Francatelli) எனும் பெண்மணிக்குச் சொந்தமானதாகும். அவர் அணிந்திருந்த இந்த ஆடை, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில், இப்போது உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago