Ilango Bharathy / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவியொருவர் கர்பமடைந்த நிலையில் இது குறித்து அம்மாணவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தமையை அடுத்தே இவ்விடயம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் ”குறித்த ஆசிரியர் அப்பாடசாலையில் 5 ஆண்டுகளாக உதவித்தொகைப் பெற்றுப் படித்து வரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் 8 மாணவிகள் அவரால் கருவுற்று உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் (15) ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago