Freelancer / 2023 நவம்பர் 26 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், பணய கைதிகளை பேச்சுவார்த்தை வழியே விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கிடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் வௌ்ளிக்கிழமை (24) விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேலிய பணய கைதிகளில் பலர் அந்நாட்டின் கிப்புஜ் பியரி பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், பணய கைதிகள் 17 பேர் அடங்கிய 2-வது குழுவினரை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது.
அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவிக்கும்போது, அவர்களில் 13 பேர் இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் மற்றும் 4 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர் என தெரிவித்தது. M

அவர்கள் கெரம் ஷாலோம் எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அவர்களின் பெயர் பட்டியலை இஸ்ரேல் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
இதுபற்றிய விவரம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதற்கு முன், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 13 பேர் மற்றும் வெளிநாட்டினர் 7 பேர் என மொத்தமாக 20 பணய கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago