Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 23 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
2ஆம் உலகப்போரின் போது ஜேர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் ஜேர்மனியின் எசன் நகரில் புனரமைப்பு பணிகளுக்கான குழி தோண்டியபோது, 2ஆம் உலகப்போரில் அமெரிக்காவால் வீசப்பட்ட 500 கிலோகிராம் எடை கொண்ட சக்திவாய்த வெடிகுண்டொன்று கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஜேர்மனி இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, குறித்த வெடிகுண்டைச் செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எசன் மற்றும் அதன் அருகில் உள்ள ஓபர்ஹவுசன் ஆகிய 2 நகரங்களில் இருந்து 3, 300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago