2025 மே 08, வியாழக்கிழமை

2 முறை கொல்ல முயன்றனர்: எலான் மஸ்க்

Mayu   / 2024 ஜூலை 15 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இந்த நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் 2 முறை தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபத்தான காலம் வரும். கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது.

2 பேர் தனித்தனி சந்தர்ப்பங்களில் என்னை கொலை செய்ய முயன்றனர். டெக்சாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்துக்கு அருகில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். என அவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X