2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்

Freelancer   / 2023 மார்ச் 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த மோதலின் வீரியத்தால், பயணிகள் ரயிலின் நான்கு முன் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் இரண்டு பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானதாகவும் ஆளுநர் கான்ஸ்டான்டினோஸ் தெரிவித்துள்ளார்.

 சுமார் 250 பயணிகளை மீட்ட பின்னர், அவர்கள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ரயில் பயணிகள் நிலநடுக்கம் போல் உணர்ந்ததாக நிவாரணக் குழுவினரால் மீட்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X