Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சமூக நல உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர் என வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் பொலிஸார் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் இது குறித்துப் பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் படி ” குற்றம் சாட்டப்பட்ட 2000 பொலிஸ் அதிகாரிகளில் 470 க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள், மற்றும் 18 சிறுவர்கள் தொடர்பான பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தற்போது அதிகாரிகள் பலரிடம் ரகசியமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026