Ilango Bharathy / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பல தரபட்ட மது பான விடுதிகளுக்கு அடுத்தடுத்து சென்று அங்கு மதுபானம் அருந்தும் நிகழ்வானது ‘ Pub Crawl‘ என அழைக்கப்படுகின்றது.
அந்தவகையில் அண்மையில் 24 மணி நேரத்தில், 78 மதுபான விடுதிகளில் மது அருந்தி `ஹென்ரிக் டீ வில்லியர்ஸ்` என்ற அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் உலக சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து ஹென்ரிக் டீ வில்லியர்ஸ் கூறுகையில், "கின்னஸ் உலக சாதனைகளின் விதிமுறைகள் படி ஒரு இடத்தில், 125 மில்லி லீற்றர் மதுவைத்தான் நான் குடித்தேன்.
எவ்வாறு இருப்பினும் இம் முயற்சியானது என்னை மிகவும் சோர்வடைய செய்துள்ளது.
இச் சாதனையைப் படைக்க முறையான திட்டமிடல் அவசியம். அந்தவகையில் இச்சாதனை முயற்சிக்கு எனக்கு உதவி புரிந்த எனது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
இதற்கு முன்னர் 24 மணி நேரத்தில் 67 விடுதிகளில் மது அருந்திய நபர் என்ற சாதனையைப் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘நேதன் க்ரிம்ப்‘ என்பவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .