Janu / 2024 ஜனவரி 28 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக நிமோனியா பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஒரேமாதத்தில் 244 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் புதிதாக 942 பேருக்கும், லாகூரில் 212 பேருக்கும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் சுகாதாரத்துறை பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026