Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சமூக ஒழுங்கை நிலை நாட்டும் முயற்சியில் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் இதுவரை வதந்திகளைப் பரப்பிய குற்றத்தின் கீழ் 34,000 இணையக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் 6,300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 4,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சக அதிகாரி லி டாங்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும், “ இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பி சமூக ஒழுங்கை, அமைதியைக் கெடுக்க முயற்சிக்கும் இணைய கணக்குகளை முடக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இணையவழியுனுடாக நடக்கும் வன்முறைகள், குற்றங்கள், இழிவுபடுத்துதல், தனிப்பட்ட விபரங்களைத் திருடுதல் போன்றவற்றுக்கு எதிராக சீன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய இதுவரை 110 வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago