Freelancer / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமிட்டுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்டுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிட்டுகளில் "ஸ்டெப் பிரமிடுகள்" (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிட்டுகள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும்.
மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்கஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத்தில், ஸ்டெப் பிரமிட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4000 வருடங்களுக்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமில்யாவ் யுரேசிய தேசிய பல்கலைக்கழகத்தை (Gumilyov Eurasian National University) சேர்ந்த தொல்பொருள் துறையினர், அபய் மாவட்டத்தில் உள்ள கிரிகுங்கிர் (Kyrykungir) குடியேற்ற பிராந்தியங்களில், 2014 முதல் நடத்தி வரும் அகழ்வாராய்ச்சியில் இதனை கண்டுபிடித்தனர்.
"அறுகோண அடித்தளத்தில் 13 மீட்டர் நீளம் உள்ள இவை 8 வரிசை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியில் ஒரே மையத்தை கொண்ட பல வட்டவடிவங்களில் கட்டுமானங்கள் உள்ளன.வெளிப்புற சுவர்களில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் பிம்பங்கள் உள்ளன. மிகவும் நுட்பமான கட்டமைப்பு கொண்ட இது, மனித நாகரிகத்தில் கற்காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட வெண்கல காலத்தை (bronze age) சேர்ந்த மக்களின் அற்புதமான தொழில்நுட்ப அறிவுக்கு சான்று" என யுரேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைமை பேராசிரியர் உலன் உமிட்கலியேவ் (Ulan Umitkaliyev) தெரிவித்துள்ளார்.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago