2025 ஜூலை 14, திங்கட்கிழமை

500 குழந்தைகளை ரஷ்யா கொன்றுள்ளது

Janu   / 2023 ஜூன் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 "உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது.

2022 பெப்ரரி 24 அன்று ரஷ்யா, உக்ரேனின் மீது படை எடுத்தது முதல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களில் பலர் பிரபலமான அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு சாம்பியன்கள்.இந்தப் போரை நாம் எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என்றார்..

“உக்ரேனின் முழு பகுதியும், எங்கள் மக்கள் , எங்கள் குழந்தைகள் அனைவரும் ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து விடுபட வேண்டும்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .