Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 500 மில்லியன் பைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஏறத்தாழ 100 நாடுகளுக்கு நன்கொடை அளிக்க, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, குறித்த விடயம் குறித்து பரிச்சயமான மூன்று தகவல் மூலங்கள் றொய்ட்டர்ஸுக்கு நேற்று தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு 200 மில்லியன் தடுப்பூசிகளையும், அடுத்தாண்டு முதல் அரையாண்டில் 300 மில்லியன் தடுப்பூசிகளையும் 92 குறைந்த வருமானமுடைய நாடுகளுக்கும், ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் ஐ. அமெரிக்கா வழங்கலாமென இத்தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த, மத்திய தர வருமானமுடைய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் கொவகஸ் தடுப்பூசித் திட்டத்தின் மூலமே குறித்த நன்கொடைகள் செல்லவுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம், தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்புக்கான பூகோளத் திட்டத்தாலேயே குறித்த திட்டம் தலைமை தாங்கப்படுகிறது.
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago