2025 நவம்பர் 05, புதன்கிழமை

’600க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி தொற்று’

Editorial   / 2019 மே 28 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம் நாட்டின் தென் சிந்து மாகாணத்திலுல்ள றத்தோ டெரோ நகரத்தில், பெரும்பான்மையாக சிறுவர்கள் உள்ளடங்கலாக 600க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

றத்தோ டெரோ நகரத்திலும், லர்கானா மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சீர்கெட்ட மருந்தூசியொன்றைப் பயன்படுத்திய வைத்தியரொருவரால் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்தே இது தொடர்பான கவனக்கூறுகள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில், கடந்த சனிக்கிழமை வரை றத்தோ டெரோ நகரத்தில் 681 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சிறப்பு சுகாதார ஆலோசகர் ஸஃபார் மிர்ஸா, இதில் 537 சிறுவர்கள், இரண்டு வயதுக்கும், 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, றத்தோ டெரோவின் 21,375 பேர் சோதிக்கப்பட்டதாகவும், எச்.ஐ.வி தொற்றுள்ளதாகக் கண்டறியப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையொன்றாகும் என ஸஃபார் மிர்ஸா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பற்ற மருந்தூசிகளை நோயாளர்கள் மீதான பாவனையால் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்பது ஒரு காரணமாக பாகிஸ்தான் அதிகாரிகளால் ஆராயப்படுகின்றது.

எச்.ஐ.வி தொற்றிருக்கக்கூடியவர்களை மட்டுமல்லானது வேறு நோயுள்ளவர்களையும் அதிகரிக்கக்ச் செய்யும் பயன்படுத்தப்பட்ட மருந்தூசிகள் மீளப் பொதிசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக ஸஃபார் மிர்ஸா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் 2017ஆம் ஆண்டு மாத்திரம் 20,000 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி ஆசிய நாடுகளுக்குள் எச்.ஐ.வி தொற்று வீதம் வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X