2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

7,000 பேரைப் பலியெடுத்த உக்ரேன்-ரஷ்யப் போர்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 31 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

 அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,  அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போரில் தற்போது வரை  சுமார் 7 ,000  பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”போர் தொடங்கிய பெப்ரவரி மாதம்  24ஆம் திகதியிலிருந்து  கடந்த 26ஆம் திகதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 6,884 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார்  10,947 பேர் காயமடைந்தனர்.

இது தவிர ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரேன் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாத்திரம்  483 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதோடு  1,633 பேர் காயமடைந்தனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .